6. கடலாடு காதை


45

தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும்



44
உரை
45

       தேர்முன் நின்ற திசைமுகன் காண - தேரின் முன்னிடத்து நின்ற நான்முகன் காணும்படி, பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும் - பாரதி வடிவாய இறைவன் வெண்ணீற்றை யணிந்து ஆடிய பெரிய பாண்டரங்கக் கூத்தும்;

       வானோராகிய தேரில் நான்மறைப் புரவி பூட்டிக் கூர்முட் பிடித்துப் பாகனாய் நின்ற திசைமுகன் என்க. இறைவன் என்பது அதிகாரத்தாற் பெற்றாம். பாண்டரங்கம் நிறம் பற்றிய பெயர். நின்று என்பது பாடமாயின், காண நின்று ஆடிய வென்க.