6. கடலாடு காதை


கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும் அவுணற் கடந்த



46
உரை
48

       கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக - கஞ்சனுடைய வஞ்சத்தை வெல்லுதற் பொருட்டாக, அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் - கரிய நிறத்தையுடைய மாயோன் ஆடிய கூத்துக் களுள், அல்லியத் தொகுதியும் - கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கொம்பை ஒடித்தற்கு நின்றாடிய அல்லியத் தொகுதி என்னும் கூத்தும் ;

       அஞ்சன வண்ணன் ஆடலுள், கடத்தற்காக ஆடிய அல்லியத் தொகுதி யென்றுமாம், மாயோனாடல் பத்து என்பர். தொகுதி யென்றார், முகம், மார்பு, கை, கால்களின் வட்டணை அவிநயம் முதலியன விருந்தும் தொழில் செய்யாது நிற்றலின் ; என்னை? "ஆட லின்றி நிற்பவை யெல்லாம், மாயோ னாடும் வைணவ நிலையே" என்றாராக லின். அல்லியம் என்பதனை அலிப்பேடு என்பாரு முளர்.