|
50 |
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன்
நின்ற
சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும்
|
|
மாக்கடல்
நடுவண் - கரிய கடலின் நடுவே, நீர்த்திரை அரங்கத்து - நீரின் அலையே அரங்கமாக நின்று,
நிகர்த்து முன் நின்ற சூர்த்திறம் கடந்தோன் - எதிர்த்து முன்னின்ற சூரனது வஞ்சத்தை
யறிந்து அவன் போரைக் கடந்த முருகன், ஆடிய துடியும் - துடி கொட்டி யாடிய துடிக் கூத்தும்
;
கடல் நடுவண் சூர்த்திறங் கடந்தோன்
அரங்கத்து ஆடிய துடியென்க. திறம் - வேற்றுருவாகிய வஞ்சம். |
|