6. கடலாடு காதை

படைவீழ்த் தவுணர் பையு ளெய்தக்
குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடையும்



52
உரை
53

       படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த-அவுணர்கள் தாம் போர் செய்தற் கெடுத்த படைக்கலங்களைப் போரிற் காற்றாது போகட்டு வருத்தமுற்ற வளவிலே, குடை வீழ்த்து அவர்முன் ஆடிய குடையும் - அவர் முன்னே முருகன் தன் குடையை முன்னே சாய்த்து அதுவே ஒருமுக வெழினியாக நின்று ஆடிய குடைக்கூத்தும் ;

       வீழ்த்தல் இரண்டனுள் முன்னது போகடுதல் ; பின்னது சாய்த்தல். முருகன் என்பது அதிகாரத்தாற் பெற்றாம்.