|
55 |
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்
|
|
வாணன்
பேரூர் மறுகிடை நடந்து - வாணாசுரனது சோ என்னும் நகர வீதியிற் சென்று, நீள்நிலம் அளந்தோன்
ஆடிய குடமும் - நெடிய பூமியைத் தாவியளந்த மாயோன் குடங்கொண்டு ஆடிய குடக்கூத்தும் ;
வாணன் தன் மகள் உழை காரணமாகக் காமன்
மகன் அநிருத்தனைச் சிறை வைத்தலின் அவனை மீட்டற்பொருட்டு உலோகங்களாலும் மண்ணாலும்
இயற்றிய குடங்களைக் கொண்டு மாயோன் ஆடின னென்க. இது விநோதக் கூத்து ஆறனுள் ஒன்று. |
|