|
|
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்
|
|
காய்சின
அவுணர் கடுந்தொழில் பொறாஅள் - காயுஞ் சினத்தையுடைய அவுணர் வஞ்சத்தாற் செய்யும்
கொடுந் தொழிலைப் பொறாதவளாய், மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும் - துர்க்கை மரக்கால்
கொண்டு ஆடிய மரக்காற் கூத்தும் ;
மாயவள் - துர்க்கை. மரக்கால் - மரத்தாலாகிய
கால். அவுணர் உண்மைப் போரால் வெல்லுத லாற்றாது வஞ்சப் போரால் வெல்லுதல் கருதி,
பாம்பு தேள் முதலியனவாய்ப் புகுதலை யுணர்ந்து, அவள் அவற்றை உழக்கிக் களைதற்கு மரக்கால்
கொண்டு ஆடினள் என்க. |
|