6. கடலாடு காதை

60

செருவெங் கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்



60
உரை
61

       செருவெங்கோலம் அவுணர் நீங்க - அவுணர் வெவ்விய போர்க்கோலம் ஒழிய, திருவின் செய்யோள் ஆடிய பாவையும் - செந்நிறமுடைய திருமகள் கொல்லிப்பாவை வடிவாய் ஆடிய பாவைக் கூத்தும் ;

       அவுணர் போர்க்கோலத்தோ டிருந்தும் போர் செய்யாது மோகித்து வீழ்தலின் கோலம் நீங்க என்றார். திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள் ; இன் சாரியை அல்வழிக்கண் வந்தது.