அவரவர்
அணியுடன் - அங்ஙனம் கூறப்பட்ட அவரவருடைய அணிகளுடனும், அவரவர் கொள்கையின் - அவரவர்
கொள்கையுடனும் ஆடிய, நிலையும் படிதமும் - நின்றாடலும் வீழ்ந்தாடலுமாகிய, நீங்கா
மரபின் - அவரவரை நீங்காத மரபினையுடைய, பதினோராடலும் - பதினொரு வகைப்பட்ட ஆடல்களையும்,
பாட்டின் பகுதியும் - அவ்வாடல்களுக் கேற்ற பாடல்களின் வேறுபாட்டையும், விதி மாண்
கொள்கையின் - அவற்றிற்கு விதித்த சிறந்த கொள்கையோடு, விளங்கக் காணாய் -
புலப்படக் காண்பாயாக ;
நிலை - நின்றாடல், படிதம் - படிந்தாடல்
; வீழ்ந்தாடல். பதினோராடலுள் நின்றாடல் ஆறு ; வீழ்ந்தாடல் ஐந்து. அவற்றை,
"அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்கம், மல்லுட னின்றாடலாறு" "துடிகடையம் பேடு
மரக்காலே பாவை, வடிவுடன் வீழ்ந்தாட லைந்து" என்பவற்றான் அறிக. கொடுகொட்டி முதல்
கடையம் ஈறாக வுள்ள இவற்றைச் சீரியல் பொலிய அணியுடனும் கொள்கையுடனும் ஆடிய பதினோராடல்
என்க.
|