6. கடலாடு காதை



70

தாதவிழ் பூம்பொழி லிருந்தியான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவளெனக்
காதலிக் குரைத்துக் கண்டுமகிழ் வெய்திய
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்



68
உரை
71

       தாது அவிழ் பூம்பொழில் இருந்து - அன்று மதுவொழுகும் பூம்பொழிற் கண்ணே யிருந்து, யான் கூறிய - என்னாற் கூறப்பட்ட, மாதவி மரபின் மாதவி இவள் எனக் காதலிக்கு உரைத்து - உருப்பசியாகிய மாதவி மரபின் வந்த மாதவி இவள் காணென்று தன் காதலிக்குக் கூறி, கண்டு மகிழ்வு எய்திய - தானும் கண்டு மகிழ்ச்சி யுற்ற, மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் - மேன்மை பொருந்திய சிறப்பினையுடைய விஞ்சையனும், அவனன்றியும் ;

       பதினோராடலும் ஆடிக் காட்டிய மாதவியைச் சுட்டி, மாதவி யிவளெனக் கூறினனென்க.