பத்துத்
துவரினும் - பத்து வகைப்பட்ட துவரினானும், ஐந்து விரையினும் - ஐந்து வகைப்பட்ட விரையினானும்,
முப்பத்திரு வகை ஓமாலிகையினும் - முப்பத்திரண்டு வகைப்பட்ட ஓமாலிகையானும், ஊறின
நல் நீர் - ஊறிக் காயப்பட்ட நல்ல நீராலே, உரைத்த நெய் வாசம் - வாசநெய் தேய்த்த,
நாறு இருங் கூந்தல் - மணங்கமழும் கரிய கூந்தலை, நலம் பெற ஆட்டி - நன்மை பெற ஆட்டி
;
துவர் முதலியன அவற்றை யுடைய பொருளுக்காயின.
வாச நெய் உரைத்த என மாறுக. இருமை - கருமை. துவர் முதலியவற்றைப் பின்வரும் மேற்கொள்களான்
அறிக ;
"பூவந்தி திரிபலை புணர்கருங் காலி,
நாவ லோடு நாற்பான் மரமே." "கொட்டந் துருக்கந் தகர மகிலாரம், ஒட்டிய வைந்தும்
விரை."
"இலவங்கம் பச்சிலை கச்சோல மேலம்,
குலவி நாகணங் கொட்டம் - நிலவிய, நாக மதாவரிசி தக்கோல நன்னாரி வேகமில் வெண்கோட்ட
மேவுசீர் - போகாத, கத்தூரி வேரி யிலாமிச்சங் கண்டில்வெண்ணெய், ஒத்தகடு நெல்லி
யுயர்தான்றி - துத்தமொடு, வண்ணக்கச் சோல மரேணுக மாஞ்சியுடன், எண்ணுஞ் சயிலேக
மின்புழுகு - கண்ணுநறும், புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம், பின்னு தமாலம் பெருவகுளம்
- பன்னும், பதுமுக நுண்ணேலம் பைங்கொடு வேரி, கதிர்நகையா யோமாலி கை" பிறவா றுரைப்பாரு
முளர்..
|