புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி
புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை - அங்ஙனம் நீராட்டிப் பொலிவினையுடைய புகையால் ஈரம் புலர்த்திய கூந்தலை, வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி - ஐந்து வகையாக வகுத்த வகைதோறும் கொழுவிய கத்தூரிக் குழம்பு ஊட்டி ; பூ ; பொலிவு ; அதனையுடைய அகிற்புகை யென்க ;