6. கடலாடு காதை


85

பரியக நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக் கமைவுற அணிந்து



84
உரை
85

       பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகம் - பாத சாலமும் சிலம்பும் பாடகமும் சதங்கையும் காற்சரியும் என்னுமிவற்றை, காலுக்கு அமைவு உற அணிந்து - காலுக்குப் பொருத்தமுறும்படி அணிந்து ;

       பரியகமாவது "பொன்னிதழ் பொதிந்த பன்னிற மணிவடம், பின்னிய தொடரிற் பெருவிரன் மோதிரம், தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின், புறவாய் சூழ்ந்து புணரவைப் பதுவே" என்பர். பரியகம் - காற்சவடி யென்றும், அரியகம் - பாதசாலம் என்றும் கூறுவர் அரும்பதவுரை யாசிரியர்.