6. கடலாடு காதை


90

காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து



89
உரை
90

       காமர் கண்டிகை தன்னொடு பின்னிய - அழகிய கண்டிகை யென்னும் அணியுடன் சேர்த்துக் காட்டிய, தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து - முத்த வளையைத் தோளுக்கு அணிந்து ;

       தூமணி - முத்து, கண்டிகை - கண்டசரம் ; கழுத்திலணியும் ஓர் அணி. "மாணிக்க வளையுடன் நீங்காமற் பொற்றொடராற் பிணித்த முத்துவளை" என்பது அடியார்க்குநல்லாருரை.