6. கடலாடு காதை


15

அமரா பதிகாத் தமரனிற் பெற்றுத்
தமரிற் றந்து தகைசால் சிறப்பிற்
பொய்வகை யின்றிப் பூமியிற் புணர்த்த
ஐவகை மன்றத் தமைதியுங் காண்குதும்



14
உரை
17

       அமராபதி காத்து -- முன்பு அவுணரால் வந்த இடர் கெடப் பொன்னகராய அமராபதியைக் காத்தமையால், அமரனிற் பெற்று, அதற்குக் கைம்மாறாக இந்திரனால் அளிக்கப்பெற்று, தமரிற்றந்து - சோழன் மரபினுள்ளாரால் கொண்டு வரப்பட்டு, தகைசால் சிறப்பின் - அழகு மிக்க சிறப்பினையுடைய, பொய்வகை இன்றிப் பூமியிற் புணர்த்த - பொய்த்த லின்றிப் புவியிலே புகார் நகரில் வைக்கப்பட்ட, ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும் - ஐவகைப்பட்ட மன்றங்களின் பெருமையையும் காண்பேம் ;

       தமர் - சோழன் முன்னோர். சிறப்பினையுடைய மன்றம் எனக் கூட்டுக. ஐவகை மன்றம் - வெள்ளிடை மன்றம் முதலாக முன் இந்திர விழவூரெடுத்த காதையிற் கூறப்பட்டவை.