6. கடலாடு காதை


மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக் கமைவுற அணிந்து



91
உரை
94

       மத்தக மணியொடு வயிரம் கட்டிய சித்திரச் சூடகம் - முகப்பிற் கட்டிய மாணிக்கத்தோடே பத்திகளில் வயிரங்களழுத்தப்பட்ட சித்திரத் தொழிலையுடைய சூடகமும், செம் பொற் கைவளை - செம்பொன்னாற் செய்த வளையும், பரியகம் - நவமணி வளையும், வால்வளை - சங்கவளையும் பவழப் பல்வளை - பலவாகிய பவழ வளைகளும் என்னும் இவற்றை, அரிமயிர் முன் கைக்கு அமைவுற அணிந்து - மெல்லிய மயிரையுடைய முன் கைக்குப் பொருத்தமுற அணிந்து ;

       சூடகம் - கடகமும், பரியகம் - கைச்சரியும், வால்வளை - வெள்ளி வளையும் என்னலுமாம்.