6. கடலாடு காதை



கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்தாங்கு



101
உரை
102

       கயிற்கடை ஒழுகிய - முற்கூறிய சங்கிலி முதலியவற்றை ஒன்றாய் இணைத்திருக்கும் கொக்குவாயினின்றும் பின்புறம் தாழ்ந்த, காமர் தூமணி செயத்தகு கோவையின் - விருப்பஞ்செய்யும் தூய முத்தினாற் செய்யப்பட்ட கோவையாகிய

       பின்றாலியால், சிறுபுறம் மறைத்து ஆங்கு - பிடரினை மறைத்து ; கயிற்கடை - கொக்குவாய் ; கொக்கியென வழங்குவது. சிறு புறம் - பிடர் ; முதுகுமாம். ஆங்கு, அசை.