இந்திர
நீலத்து இடையிடை திரண்ட சந்திரபாணித் தகைபெறு கடிப்பிணை - இந்திர நீலத்துடன்
இடையிடையே திரண்ட வயிரத்தாற் கட்டப்பட்டு அழகு பெற்ற குதம்பையென்னும் அணியை,
அம் காது அகவயின் அழகுற அணிந்து - வடிந்த காதினிடத்தே அழகு மிகும்படி அணிந்து ;
முகப்பிற் கட்டின இந்திர நீலத்தின்
இடையிடை வயிரங் கட்டின நீலக் குதம்பையை அணிந்தென்று அடியார்க்கு நல்லாரும், நீலக்
குதம்பை, வயிரக் குதம்பையாகிய இரண்டையும் இரு காதிலும் அணிந்தென்று அரும்பதவுரையாசிரியரும்
கருதுவர். சந்திரபாணி - சந்திரபாணியென்னும் பெயருடைய வயிரம்.
|