6. கடலாடு காதை




தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி
மையீர் ஓதிக்கு மாண்புற அணிந்து



106
உரை
108

       தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி - சீதேவி யென்னும் பணியுடனே வலம்புரிச் சங்கும் தொய்யகம் புல்லகம் என்பனவும் தம்மில் தொடர்ந்து ஒன்றான தலைக்கோலத்தை, மை ஈர் ஓதிக்கு மாண்பு உற அணிந்து - கரிய பெரிய கூந்தலுக்கு அழகுறும்படி அணிந்து ;

       செழுநீர் - வலம்புரிக்கு அடை. வலம்புரிச் சங்குபோலும் அணி வலம்புரியெனப்பட்டது. தொய்யகம் - பூரப்பாளை என்றும், புல்லகம் - தென்பல்லி வடபல்லி என்றும் கூறுவர். இருமை ஓதி ஈரோதியென்றாயிற்று; ஈர் - ஈரிய என்றுமாம்.