6. கடலாடு காதை


110

கூடலும் ஊடலும் கோவலற் களித்துப்
பாடமை சேக்கைப் பள்ளியு ளிருந்தோள்



109
உரை
110

       கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து - கூடுதலையும் பின்னர் ஊடுதலையும் கோவலற்கு அளித்து, பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள் - படுத்தலமைந்த சேக்கையாகிய பள்ளியிடத்தே இருந்தவள் ;

       ஊடல் - பெண்மையும் நாணும் அழிந்து வந்து வலிதிற் குறையுற்றுக் கூடுந் துணையும் பிரிவாற்றியிருந்தீராகலின் நீர் அன்பிலீர் என ஊடுவது. ஊடலையளித்தல் - அதனால் வருந் துன்பத்தையளித்தல். பாடு ஒன்றின்மே லொன்றாகப் படுத்தல். சேக்கை - சேருமிடம். ஊடற்கோலமோ டிருந்தோன் உவப்பக் கூந்தலை நீராட்டி மான்மதச் சேறூட்டிக் கால்விரல் முதல் ஓதி ஈறாக அணியத் தகுவன அணிந்து அளித்து இருந்தோள் என்க.