பொய்கைத்
தாமரைப் புள் வாய் புலம்ப - பொய் கைகளில் தாமரைப் பூஞ்சேக்கையில் துயின்ற புட்கள்
வாய் விட்டுப் புலம்ப, வைகறை யாமம் வாரணம் காட்ட - வைகறைப் பொழுதென்பதனை வாரணங்கள்
அறிவிக்க, வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய - வெள்ளியெழுந்த விளக்கம் செறிந்த
இருளை நீக்க, தார் அணி மார்பனொடு - மாலையணிந்த மார்பினையுடைய கோவலனோடு, பேர்
அணி அணிந்து - மதாணி முதலிய பேரணி கலங்களை அணிந்து, வான வண் கையன் அத்திரி ஏற
- மேகம் போலும் வண்மையையுடைய கையினனாகிய அவன் அரச வாகனமாகிய அத்திரியில் ஏற,
மான் அமர் நோக்கியும் வையம் ஏறி - மானின் பார்வை பொருந்திய நோக்கினையுடைய
மாதவியும் கொல்லாப் பண்டியில் ஏறி ;
வைகறையாகிய யாமம் என்க. வாரணம்
- கோழி, சங்கு; கோழியின் குரலும் சங்கின் முழக்கமும் வைகறையில் எழுவன. அத்திரி-
கோவேறு கழுதை; இதனைக் குதிரையில் ஒரு சாதியென் பாருமுளர். வையம் - கொல்லாப் பண்டி
; இது கோவாலவண்டி என்ற உருவுடனும் காணப்படுகின்றது. வையம் - தேர் என்றும், கூடாரப்பண்டி
யென்றும் கூறலுமாம். அவனும் உடன் செல்ல உடம்பட்ட வளவிலே பேரணியணிந்து, வண் கையன்
அத்திரி யேற, நோக்கியும் மார்பனொடு செல்ல வையமேறியென்க.
|