6. கடலாடு காதை

மேகர வாரி வளந்தந் தோங்கிய
நகர வீதி நடுவண் போகிக்



128
உரை
129

       மகர வாரி வளம் தந்து ஓங்கிய - கடலின் வளத்தைக் கொணர்தலால் உயர்ச்சி பெற்ற, நகரவீதி நடுவண் போகி - நகர வீதியினூடே சென்று ;

       தந்து - தருதலால். நகரவீதி - மருவூர்ப்பாக்க வீதி.