கலம்
தரு திருவின் - மரக்கலங்கள் தந்த செல்வத்தையுடைய, புலம் பெயர் மாக்கள் - தம்
தேயங்களை விட்டுப் போந்த பரதேயத்தினர், வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்
கூல மறுகில் - கடலின் அலைவா யிருப்பில் வெண்மணலையுடைய கூல வீதியில், கொடி எடுத்து
நுவலும் மாலைச்சேரி மருங்கு சென்று எய்தி - இன்ன சரக்கு ஈண்டுளதென்று கொடிகளெடுத்து
அறிவிக்கும் ஒழுங்குபட்ட சேரிகளைக் கடந்து நெய்தலங்கானலை எய்தி ;
வாலுகம் - வெண்மணல். வேலை விரிதிரைப்
பரப்பில் வாலுகத்து மறுகு என்றியைக்க. எடுத்து - எடுத்தலால் என்க. நுவலுதல் - ஈண்டு
அறிவித்தல். சரக்குக்களின் நன்மையை அறிவித்தலுமாம்.
|