நிரை நிரை எடுத்த புரைதீர் காட்சி - நிரை நிரை யாகககுவித்த குற்றமற்ற காட்சியையுடைய,
மலைப் பஃறாரமும் கடற் பஃறாரமும் வளம் தலை மயங்கிய - மலைதரும் பல பண்டமும் கடல்தரும்
பல பண்டமும் ஆகிய வளம் கலந்து கிடக்கும், துளங்கு கல இருக்கை - மரக்கலங்கள் அசைகின்ற
துறைமுகங்களிற் சோலை சூழ்ந்த இருப்பிடத்தே ;
பல்தாரம் - பஃறாரம் என்றாயிற்று.
தாரம் - பலபண்டம் ; பல் என்னும் அடையடுத்தமையால் ஈண்டு வாளா பண்டம் என்னும் பொருட்டு.
தலைமயங்கிய - கலந்த ; ஒரு சொல். இடந்தோறும் மயங்கிய என்றுரைப்பாரு முளர்.
|