6. கடலாடு காதை



165

கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்று
இடங்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்கியைந் தொலிப்பக்



163
உரை
165

        கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேர் யாற்று - கடலினது கரையைக் குத்தி யிடிக்கும் காவிரியின் புகார் முகம் எங்கும், இடம் கெட ஈண்டிய - வறிதிடம் இன்றாகத் திரண்ட, நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை - நால்வகை வருணத்தாரின் அடக்கப்படாத ஆரவாரமெல்லாம், உடங்கு இயைந்து ஒலிப்ப - ஒருங்குகூடி ஓரோசையாய் நின்றொலிப்ப ;

        மெலிக்கும் - மெலிவிக்கும். காவிரியாகிய பேர் யாறு.