6. கடலாடு காதை


துவரிதழ்ச் செவ்வாய்த் துடியிடை யோயே
அமரர் தலைவனை வணங்குதும் யாமெனச்



26
உரை
27

       துவர் இதழ்ச் செவ்வாய்த் துடி இடையோயே - செந் நிறமுடைய உதட்டினையும் சிவந்த வாயையுமுடைய உடுக்கையின் நடுப்போலும் இடையை உடையோய், அமரர் தலைவனை வணங்குதும் யாம் என - அங்குப் பூசைகொள்ளும் இந்திரனை யாமும் வணங்குவேம் என்று சொல்லி அவளுடன் போந்து,

       ஏகாரம் இசைநிறை, யாமும் என்னும் உம்மை தொக்கது; என்று சொல்லிப் போந்து என விரித்துரைக்க.