6. கடலாடு காதை


                வெண்பா

வேலை மடற்றாழை யுட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு--காலைக்
களிநறவந் தாதூதத் தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர்



1
உரை
4

                வேலை - கடற்கரையிலுள்ள, மடற்றாழை - மடல் விரிந்த தாழையின், உட்பொதிந்த வெண்தோட்டு - உள்ளே செறிந்த வெள்ளிய இதழின்கண், மாலைத் துயின்ற மணிவண்டு - மாலைப் பொழுதிலே துயின்ற நீலநிறமுடைய வண்டு, காலை - காலைப் பொழுதில், களி நறவம் தாது ஊத - களிப்பைச் செய்யும் தேனினையும் தாதினையும் ஊதும்படி, காமர் தெளிநிற வெங்கதிரோன் தேர் - அழகிய தெளிந்த நிறத்தினையுடைய வெய்ய சுடரினனாகிய பரிதியின் தேர், தோன்றிற்று - கீழ்த்திசையில் உதித்தது.

கடலாடு காதை முற்றிற்று.