|
30
|
சிமையத் திமையமுஞ் செழுநீர்க்
கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத் தடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுட்
காவிரி நாடுங் காட்டிப் பின்னர்ப்
பூவிரி படப்பைப் புகார்மருங் கெய்திச்
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லன் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
|
|
சிமையத்து
இமையமும் - கொடுமுடியையுடைய இமயமலையையும், செழுநீர்க் கங்கையும்-வளவிய நீரையுடைய கங்கையாற்றினையும்,
உஞ்சையம்பதியும் - அழகிய உஞ்சைப் பதியையும், விந்தத்து அடவியும் - விந்தமலை சூழ்ந்த
காட்டினையும், வேங்கடமலையும் - வேங்கடமென்னும் மலையினையும், தாங்கா விளையுட் காவிரிநாடும்
- நிலம்பொறாத விளையுளையுடைய காவிரி பாயும் சோணாட்டினையும், காட்டி - தன் காதலிக்குக்
காட்டி, பின்னர் - அதன் பின்பு, பூவிரி படப்பைப் புகார் மருங்கு எய்தி - பூக்கள் விரிந்த
தோட்டங்களையுடைய புகாரின் இடத்தை அடைந்து, சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
- இந்திரனைத் தொழுது முன்சொன்ன முறையே காட்டி, மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
- வளம் பொருந்திய அம் மூதூரில் நடக்கின்ற தேவரும் மகிழும் விழாவைத் தானும் காண்கின்றவன்
;
உஞ்சை - உச்சயினி ; அவந்திநாட்டின்
தலைமைப் பதி. இமயம் முதலியன முறையே ஒன்றினொன்று தெற்கின்கண் உள்ளனவாதலால் இடைப்பட்ட
அவற்றை அம்முறையே காட்டிப் புகாரினை எய்தினன். விளைவின் மிகுதி கூறுவார் 'தாங்கா
விளையுள்' என்றார். 1"வேலியாயிரம்
விளையுட்டாக" எனப் பிறரும் சோணாட்டின் விளைவு மிகுதி கூறினமை காண்க. விளையுள், உள்
தொழிற்பெயர் விகுதி. மணிவிழா என்பது பாடமாயின் அழகிய விழாவென்க. |
1.
சிலப் 16 : 71-2.
|
|