6. கடலாடு காதை


சீரியல் பொலிய நீரல நீங்கப்



38
உரை
38

       சீர்இயல் பொலிய நீர் அல நீங்க - அவதாளம் நீங்கத் தாளவியல்பு பொலிவு பெற ;

       நீங்கப் பொலிய என மாறுக. நீங்குதலாற் பொலிவுற எனினு மமையும். இவற்றை மேல் மாதவிக்கு அடையாக்குக.