கயல்
எழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம் திங்களோ
காணீர் - கண்ணெனக் கயலையும் புருவமென வில்லையும் கூந்தலெனக் கரிய மேகத்தையும் எழுதி
அவற்றுடன் பிறரை வருத்துந் தொழிலையும் எழுதிப் பணிக்குறை யற்ற முகம் திங்களோ காணீர்,
திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே அங்கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே-அழகிய
இடத்தையுடைய வானத்திருப்பின் அரவு கவருமென்று அஞ்சித் திமிலால் வாழ்பவருடைய சீறூரின்கண்
வந்து உறையும் அழகிய திங்களோ காணீர் ;
காமன் செயல் - பிறரை
வருத்துந் தொழில். தீர்ந்த - குறையற்ற ; முற்றுப் பெற்ற. திங்களோ, ஓ - வியப்பு,
திமில் - மீன் படகு. சீறூர்க்கு, வேற்றுமை மயக்கம். அரவு - இராகு கேது. திங்களோ
என வியந்தவன், அது நிலத்தின்கண் வருதற்குக் காரணங் கற்பித்து வானத்தரவஞ்சிச்
சீறூரில் வாழ்வதாகிய திங்களோ என்றானென்க.
|