எறி
வளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஒடும் - கரையிலே அலைகள் எறியும் வளைகள் முழங்க அதற்கஞ்சி
இரண்டு பக்கத்தும் ஒடும், கறை கெழு வேற் கண்ணோ கடுங்கூற்றம் காணீர் - குருதிக் கறை
பொருந்திய வேல்போன்ற கண்ணையுடையாள் கடிய கூற்றமோ பாரீர், கடுங்கூற்றம் காணீர்
கடல் வாழ்நர் சீறூர்க்கே மடம் கெழு மென் சாயல் மகளாயது - கடல் வளத்தால் வாழ்பவருடைய
சிறிய ஊரிலே மடப்பம் பொருந்திய மிக்க மென்மையையுடைய மகளாகியதான கடிய கூற்றமோ
பாரீர் ;
வேற் கண்-வேற் கண்ணையுடையாள்;
ஆகுபெயரென்பர் அரும் பதவுரையாசிரியர். கூற்றமோ என ஓகாரத்தைப் பிரித்துக் கூட்டுக.
சாயல் - மென்மை.
|