பொழில்
தரு நறுமலரே - பொழிலால் தரப்படும் நறிய மலரும், புதுமணம் விரி மணலே - அம் மலர்களின்
புதிய மணம் பரந்த மணலும், பழுதறு திரு மொழியே - அதில் நின்றவளுடைய குற்ற மற்ற இனிய
மொழியும், பணை இள வனமுலையே - பருத்த இளமையாகிய அழகிய முலையும், முழுமதி புரை முகமே
- நிறைமதி போலும் முகமும், முரி புரு வில் இணையே - வளைந்த புருவமாகிய இரண்டு வில்லும்,
எழுதரும் மின் இடையே - எழுதற்கரிய மின் போன்ற இடையும், எனை இடர் செய்தவையே -
என்னைத் துன்புறுத்தியவை யாகும்;
முரி - வளைவு. புரு -
புருவம். மலர், மணல் என்பன தலைவியைக் கண்ட இடத்தையும், மொழி முதலியன தலைவியின்
இயலையும் அறிவிப்பன. ஏகாரங்கள் எண்ணுப்பொருளன. பின்வருவனவும் இன்ன.
|