திரை
விரிதரு துறையே - அலைகள் பரந்த நீர்த் துறையும், திரு மணல் விரி இடமே - அழகிய
மணல் பரந்த இடமும், விரை விரி நறுமலரே - மணம் விரிந்த நறிய மலரும், மிடைதரு பொழில்
இடமே - தருக்கள் நெருங்கிய சோலையினிடமும், மரு விரி புரிகுழலே - மணம் பரந்த சுருண்ட
கூந்தலும், மதி புரை திருமுகமே - மதியை யொக்கும் அழகிய முகமும், இரு கயல் இணைவிழியே
- இரண்டு கயல்போலும் இருவிழியும், எனை இடர் செய்தவையே-என்னைத் துன்புறுத்தியவை
யாகும்;
விரிதரு, மிடைதரு என்பவற்றில்
தரு துணைவினை.
|