கடல்
புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர் - நின் மூத்தோர் கடலிற் புகுந்து உயிர்களைக்
கொன்று வாழா நிற்பர் ; உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை மன் நீயும் - நீயும்
உடலிற் புகுந்து உயிரைக் கொன்று வாழ்கின்றனை ; மிடல் புக்கு அடங்காத வெம்முலையோ
பாரம் - வலியிலே புகுந்து நின்று அடங்காத வெவ்விய முலைகளோ பாரமாகவுள்ளன ; இடர்
புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் - இடரிலே கிடந்து மெலியும் இடையை இழந்துவிடாதே
;
ஐயர் - மூத்தோர்
; தந்தை, தமையன்மார். என்னுயிரைக் கொன்றென்க. நின்னையர் உயிர் கொன்று வாழ்வரென்றது,
உயிர் கொல்வது நின் குல தருமமாக வுள்ளது என்று காட்டுதற்கு. நீ புரியும் இக் கொடுவினையால்
நின் இடை முரியவுங் கூடும்; அன்றியும் நின் முலைகளோ பாரமாகவுள்ளன ; ஆதலின் உயிர்கொல்லுந்
தீமையைக் கைவிட்டு, அப் பாரத்தை என் தோளி லேற்றி, நின் இடையைப் பாதுகாப்பாயாக
; என்று தலைவன் கூறினானென்க. எனது ஆற்றாமையைத் தீர் என்பது கருத்து. மன் - அசை
; மிகவும் என்றுமாம். கண்டாய், முன்னிலையசை. பின்னிரண்டு கவிகட்கும் இங்ஙனமே பொருள்கொள்க.
இடர்புக்குகு மின்னிடை எனவும் பாடம்.
|