கொடுங்
கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை - வளைந்த கண்களையுடைய வலையால் உயிர்களைக்
கொல்வான் நின் தந்தை ; நெடுங்கண் வலையால் உயிர் கொல்வை மன் நீயும் - நீயும்
நெடிய கண்ணாகிய வலையால் உயிரைக் கொல்லா நிற்பை ; வடம் கொள் முலையால் - முத்து
வடத்தைத் தாங்கியுள்ள முலைகளால், மழை மின்னுப் போல நுடங்கி உகும் மெல் நுசுப்பு
இழவல் கண்டாய் - மேகத்தின் மின்னினைப் போல் அசைந்து தளரும் மெல்லிய இடையை
இழந்துவிடாதே ; கொடுங்கண் - கண்போன்றிருக்கும் வலையின் இடைவெளிகள். நெடுங்கண்
வலை, உருவகம். வடமும் ஒரு பாரமென்றபடி. முலையால் இழவல் என்றியைக்க.
நுடங்குமிளமென்னுசுப்பு
எனவும் பாடம்.
|