ஓடும்
திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர் - உன்னுடைய மூத்தோர் கடலில் ஓடும்
படகினைக் கொண்டு உயிர்களைக் கொல்வர் ; கோடும் புருவத்து உயிர் கொல்வை மன்
நீயும் - நீயும் நினது வளைந்த புருவத்தால் உயிரைக் கொல்லா நிற்பை ; பீடும் பிறர்
எவ்வம் பாராய் - நினது பெருமையினையும் பிறர் படுந் துன்பத்தையும் நீ பார்த்தல்
செய்யாய் ; முலை சுமந்து - முலைகளைச் சுமத்தலால், வாடும் சிறு மென் மருங்கு இழவல்
கண்டாய் - வாடுகின்ற சிறிய மெல்லிய இடையை இழந்துவிடாதே ;
எவ்வமும் என்னும் உம்மை
தொக்கது. பீடும் எவ்வமும் என்னும் உம்மைகள் எண்ணும்மையும் சிறப்பும்மையு மாகும்.
'பாரா' என்னும் பாடத்திற்குத் தம் பெருமையும் பிறர் எவ்வமும் பாராத முலை என்று பொருள்
கொள்க. சுமத்தலால் இழவல் என்க. இழவல், அல் எதிர்மறை ;
1"மகனெனல்" என்புழிப்போல.
இவை மூன்றும் புணர்ச்சி
நீட இடந்தலைப்பாட்டிற் புணர்த லுறுவான் ஆற்றாமை கூறியவை. 2தொல்காப்பிய
வுரையில் "கடல் புக் குயிர் கொன்று" என்பதனைப் பொய்பாராட்டல் என்னுந் துறைக்கு
உதாரணங் காட்டினர் நச்சினார்க்கினியர்.
1
குறள். 2.
தொல், பொருளதி, 102.
|