பவள
உலக்கை கையாற் பற்றி - பவளத்தாலாகிய உலக் கையைக் கையாற் பற்றி, தவள முத்தம்
குறுவாள் செங்கண் - வெண்மையாகிய முத்துக்களைக் குற்றுபவளுடைய சிவந்த கண்கள், தவள
முத்தம் குறுவாள் செங்கண் -, குவளை அல்ல கொடிய கொடிய - குவளை மலர்களல்ல ; அவை
கொடியன கொடியன ;
குறுதல் - இக் காலத்தே
குற்றுதல் என வழங்குகிறது, முத்தை அரிசியாகப் பெய்து பவள உலக்கையாற் குறுவரெனச் செல்வச்
சிறப்புக் கூறியவாறு. நிறம் பற்றிக் குவளை யென்ன வேண்டா, அவை கொடியன வென்க.
|