மன்னும்
மாலை வெண்குடையான் - பெருமை பொருந்திய மாலை யணிந்த வெண்குடையை உடையவனாகிய சோழன்,
வளையாச் செங்கோல் அது ஓச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் - என்றும் வளைதல்
இல்லாத செங்கோலைச் செலுத்திக் குமரியைக் கூடினாலும், புலவாய் வாழி காவேரி - காவேரி
நீ வெறுத்தல் செய்யாய் ஆதலின் வாழ்வாயாக ; கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது
ஒழிதல் -- அங்ஙனம் வெறா தொழிந்தது, கயற் கண்ணாய் - கயலாகிய கண்ணையுடையாய்,
மன்னும் மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி - மாதரது நிலை பெற்ற
பெரிய கற்பாகும் என்று யான் அறிந்தேன் ; வாழ்வாயாக ;
அதிகாரத்தானும், காவேரி கூறினமையானும் வெண்குடையான் சோழனாயிற்று. வளையா என அடையடுத்தமையால்
செங்கோல் கோலென்னு மாத்திரையாயிற்று எனலுமாம் ; 1"கோடாத
செங்கோல்" என்பதன் உரை நோக்குக. கன்னி - குமரியாறு. கன்னியைப் புணர்தலாவது குமரியும்
உட்படத் தெற்கே தன் ஆணை செல்ல நிற்றல். மேலிற் செய்யுளுரையில் உரைத்தன பிறவும்
ஈண்டுத் தந்துரைக்க.
.1
சீவக. 7.
|