கள்
வாய் நீலம் கையின் ஏந்தி - தேனை வாயினிடத்துடைய நீலப் பூவைக் கையிலே ஏந்திக்கொண்டு,
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் - உணங்கலிடத்துப் பறவையை ஓட்டுபவளுடைய சிவந்த
கண்கள், புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் -, வெள் வேல் அல்ல வெய்ய வெய்ய -
வெள்ளிய வேல்கள் அல்ல ; மிகவும் கொடியனவே யாகும்;
உணங்கல்வாய்ப் புள்
என மாறுக. உணங்கல் - மீன் வற்றல். வெள் வேல்- மாற்றாரை யெறிந்து குருதிக் கறை
பற்றாத வேல், வடிவு பற்றி வெள் வேல் என்ன வேண்டா ; இவை மிகக் கொடியன என்க.
இப் பாட்டுகளில் நெய்தற் கருப்பொருளே வந்திருத்தல் காண்க. இவை கந்தருவ மார்க்கத்தால்
இடை மடக்கி வந்தன.
இவை மூன்றும் குறியிடத்துக்
கண்ட பாங்கன் சொல்லியவை ; புணர்ந்து நீங்குவான் விடுத்தலருமையால் ஆற்றானாய்த்
தன் நெஞ்சிற்குச் சொல்லியவையுமாம்.
|