7. கானல்வரி




135

[ 23 ]

சேரல் மடவன்னம் சேரல் நடைஒவ்வாய்
சேரல் மடவன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரைநீர் வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடவன்னம் சேரல் நடையொவ்வாய்.


134
உரை
137

         சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் - மடப்பத்தையுடைய அன்னமே (விளையாட்டு விருப்பினால் ஓடுவாளைக் கண்டு இவள் நடை உனது நடை போலும் என்று புலவர் சொல்வாராயினும், இவள் விளையாட்டொழிந்து இயல்பாக நடக்குமிடத்து) இவள் நடையை உனது நடை ஒவ்வாது, ஆதலால் இவள் பின்னே செல்லாதிருக்கக் கடவை ; செல்லா திருக்கக்கடவை; ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்பரக்கின்ற அலைகளையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்திலுள்ளாரை வென்று திரிபவள் பின்னே, சேரல் ..... ஒவ்வாய் - நடை யொவ்வாயாதலால் அன்னமே செல்லாதிருக்கக் கடவை ;

         நீர்வேலி - நெய்தனிலமுமாம். ஊர்திரை நீரோத முழக்கி என்பது பாடமாயின், கழியின் நீரைக் கலக்கி யென்க. இதுவும் கந்தருவமார்க்கத்தால் அடிமடக்கி வந்தது.

         இது, காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமஞ்சாலா இடும்பை யெய்தியோன் சொல்லியது.

'         'கடல்புக் குயிர்கொன்று'' என்பது முதலிய ஏழும் திணை நிலைவரி.