பூ
ஆர் சோலை மயில் ஆல - பூக்கள் நிறைந்த சோலையில் மயில்கள் ஆடவும், புரிந்து குயில்கள்
இசை பாட - குயில்கள் விரும்பி இசை பாடவும், காமர் மாலை அருகு அசைய - விருப்பம்
பொருந்திய மாலைகள் அருகில் அசையவும், நடந்தாய் வாழி காவேரி - நடந்தாயாகலாற்
காவேரி நீ வாழ்வாயாக ; காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் - நீ அங்ஙனம் நடந்த
செயலெல்லாம், நின் கணவன் நாம வேலின் திறம் கண்டே - நின் கணவனது அச்சத்தைச்
செய்யும் வேலின் றன்மையைக் கண்டே; அறிந்தேன் வாழி காவேரி - யான் அதனை அறிந்தேன்
; வாழ்வாயாக;
பூவர், ஆர்நெடில் குறுகியது.
மாலை - புதுப்புனலாடுவார் அணிந்தவை. நாம் என்னும் உரிச்சொல் ஈறு திருந்தது ; நாமம்
- புகழ் என்று முரைப்பர். வேலின் றிறங் கண்டே என்றது பிறரால் வருத்தமில்லை யென்றபடி.
|