மறையின்
மணந்தாரை வன்பரதர் பாக்கத்து - வன்மையுடைய பரதர்களின் பாக்கத்தில் களவிற் கூடிய
மகளிரை, மடவார் செங்கை இறை வளைகள் தூற்றுவதை - அம் மகளிரது சிவந்த கையின் இறையிலுள்ள
வளைகள் கழன்று தூற்றுவதை, ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய - ஐயனே ஏழையேமாகிய
யாங்கள் எங்ஙனம் அறியாநிற்பேம் ; நிறை மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை
அரும்பிப் பூத்த பொறை மலி பூங்கொம்பு ஏற - அன்னமானது நீண்ட புன்னையினது அரும்பிப்
பூத்த பூக்களின் பாரம் மிக்க கொம்பினிடத்தில் ஏறியிருப்ப அவ் வன்னத்தையும் பூக்களையும்
நிறைமதியும் மீன் கணமுமெனக் கருதி, வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம்மூர் - வண்டு ஆம்பல்
மலரை ஊதாநிற்கும் புகாரே எம்முடைய ஊராகும் ;
அம் மடவார் எனச் சுட்டு வருவிக்க.
களவிற் புணர்ச்சி நிகழ்த்திப் பிரிந்து சென்ற தலைவர் வரவு நீட்டித்தலின் தலைமகள்
கை வளைகள் கழன்று களவினை வெளிப்படுத்தலாயின வென்க. மணந்த தலைவரைத் தூற்றுவதை
யென்றுமாம். தூற்றுதல் - பலருமறியப் பரப்புதல். யாங்கு, ஆங்கு என்பதுபோல் அசை. அன்னம்
கொம்பு ஏற அதனையும் பூக்களையும் மதியும் மீனுமாகக் கருதி என இயைக்க ; நிரனிறை.
வண்டூதும் என்றமையால் ஆம்பல் மலர்தல் பெற்றாம். மதியும் மீனுமென ஆம்பல் மலர அதன்கண்
வண் டூதும் என்க.
|