நேர்ந்த
நம் காதலர் - நம்மொடு பொருந்திய காதலரது, நேமி நெடுந் திண்டேர் - உருளையுடைய
நெடிய திண்ணிய தேர், ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற ஓதமே - சென்ற வழி சிதையும்படி
பரக்கின்ற வெள்ளமே, பூந் தண் பொழிலே - குளிர்ச்சி பொருந்திய பூக்களையுடைய சோலையே,
புணர்ந்து ஆடும் அன்னமே - துணையுடன் கூடி விளையாடும் அன்னமே, ஈர்ந் தண் துறையே--ஈரமாகிய
குளிர்ந்த நீர்த் துறையே, இது தகாது என்னீரே - இங்ஙனம் பிரிவது தகாது என்று தலைவர்க்குக்
கூறுகின்றீ ரில்லை ;
நேர்ந்த - பிரியேனென்று
சூளுரைத்த எனலுமாம். பிரிவென்று சொல்லவும் அஞ்சி, இதுவெனச் சுட்டி யொழிந்தார்.
இனி, ஊர்கின்ற என்பதை முற்றாக்கி, ஓதம் ஊர்கின்றன இது தகா தென்னீர் எனப் பொழில்
முதலியவற்றிற் குரைத்ததூஉமாம். நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டேர் ஊர்ந்தவழி
சிதைய ஊர்ந்தாய்வாழி கடலோதம் ஊர்ந்தவழி சிதைய ஊர்ந்தாய்மற் றெம்மொடு தீர்ந்தாய்போல்
தீர்ந்திலையால் வாழி கடலோதம்.
|