நல்
நித்திலத்தின் பூண் அணிந்து - நல்ல முத்தாகிய பூணினை யணிந்து, நலம் சார் பவளக்
கலை உடுத்து - நன்மை பொருந்திய பவளமாகிய மேகலையை உடுத்து, செந்நெற் பழனக் கழனிதொறும்
- செந்நெற் பயிர்களையுடைய மருதநிலத்துக் கழனிதொறும், திரை உலாவு கடற் சேர்ப்ப
- அலைகள் உலாவுகின்ற கடலின் கரையையுடைய தலைவனே, புன்னைப் பொதும்பர் - புன்னை
மரம் அடர்ந்த சோலையிலே, மகரத் திண் கொடி யோன் எய்த புதுப் புண்கள் - வலிய
மகரக் கொடியையுடைய மன்மதன் அம்பெய்தமையாலான புதிய புண்கள், என்னைக் காணா வகை
மறைத்தால் - என் னுருவினைக் காணாதபடி மறைப்பின், அன்னை காணின் என் செய்கோ -
அதனைத் தாய் அறியின் என் செய்வேன் ;
நித்திலத்தின் பூண்,
பவளக்கலை என்பன வேற்றுமைத் தொகையும் பண்புத்தொகையுமாம். பழனம் - மருதம், நீர்நிலை.
பொதும்பர் - மரச்செறிவு. புதுப்புண் என்றது தலைவி மேன் மேல் வருந்துகின்ற வருத்தத்தை.
பொதும்பர் தாதினை யுதிர்த்துப் புண்களை மறைத்தால் என்றுரைப்பாருமுளர்.
|