கைதை வேலிக் கழிவாய் வந்து - தாழையை வேலியாக வுடைய இக் கழியின்பால்
வந்து, எம் பொய்தல் அழித்துப் போனார் ஒருவர் - நம்முடைய விளையாட்டை மறப்பித்துச்
சென்றார் ஒருவர், பொய்தல் அழித்துப் போனார் அவர் - அங்ஙனம் விளையாட்டை மறப்பித்துச்
சென்ற அவர், நம் மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர் - நமது மயக்கத்தையுடைய மனத்தை
விட்டு நீங்குவாரல்லர் ;
கழி - கடல் சார்ந்த நிலமும்
நீரோடையும். பொய்தல் - மகளிர் விளையாட்டு. அழித்தல் - ஈண்டு மறப்பித்தல் ;
1"சேர்ப்பே
ரீரளை யலவற் பார்க்குஞ், சிறுவிளை யாடலு மழுங்க, நினைக்குறு பெருந்துயர மாகிய நோயே"
என்பதிற்போல.
1
நற். 123.
|