7. கானல்வரி




245

[ 44 ]

கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல் கென்றே நின்றா ரொருவர்
நீநல் கென்றே நின்றா ரவர்நம்
மானேர் நோக்க மறப்பா ரல்லர்.




244
உரை
247

         கானல் வேலிக் கழிவாய் வந்து - சோலை சூழ்ந்த கழியினிடத்து வந்து, நீ நல்கு என்றே நின்றார் ஒருவர் - நீ அருள் செய்வாய் என்று சொல்லியே நின்றார் ஒருவர், நீ நல்கென்றே நின்றார் அவர் - அங்ஙனம் நின்ற அவர், நம் மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர் - நமது மானை யொத்த பார்வையை மறப்பாரல்லர் ;

         மான் ஏர் நோக்கம் எனப் பிரித்தலுமாம்.