அன்னம் துணையோடு ஆடக் கண்டு - அன்னப் பறவை தன் துணையுடன் விளையாடக் கண்டு,
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர் - நேற்று அதனையே நோக்கி நின்றார் ஒருவர்,
நென்னல் நோக்கி நின்றார் அவர் - அங்ஙனம் நோக்கி நின்ற அவர், நம் பொன்
நேர் சுணங்கிற் போவார் அல்லர் - நமது பொன்னை யொத்த சுணங்கு போல நம்மை விட்டு
நீங்குவாரல்லர் ;
நென்னல் - நெருநல் என்பதன் மரூஉ.
நோக்கி - என்னை நோக்கி யென்றுமாம். சுணங்கு - தேமல். அழகிய சுணங்குமாம்.
இவை மூன்றும் மெலிதாகச் சொல்லிக்
குறைநயப்பித்தல் ; ஆற்றுவித்தற் பொருட்டுத் தோழி இயற் பழிக்கத் தலைமகள் இயற்பட
மொழிந்ததூஉமாம். இவை சாயல்வரி என்பர்.
|