7. கானல்வரி






255

[ 46 ]

அடையல் குருகே அடையலெங் கானல்
அடையல் குருகே அடையலெங் கானல்
உடைதிரை நீர்ச் சேர்ப்பற் குறுநோ யுரையாய்
அடையல் குருகே அடையலெங் கானல்.



252
உரை
255

         அடையல் குருகே அடையல் எம் கானல் - குருகே எம் கானலிடத்து அடையாதே, அடையல் குருகே அடையல் எம் கானல் -, உடை திரை நீர்ச் சேர்ப்பதற்கு உறுநோய் உரையாய்- உடைகின்ற அலையையுடைய கடற் சேர்ப்பனுக்கு எமது மிக்க நோயை உரையாய் ; ஆதலால், அடையல் குருகே அடையல் எம் கானல்--;

         குருகு - நாரை; வேறு பறவையுமாம். உரையாய் ஆதலால் அடையாதே என்றாள். இது, காம மிக்க கழிபடர் கிளவி.