பிரிந்தார் பரிந்து உரைத்த பேரருளின் நீழல் - பிரிந்து சென்ற தலைவர் அன்புற்று
உரைத்த பெரிய தண்ணளியாகிய நிழலிலே, இருந்து ஏங்கி வாழ்வார் உயிர்ப் புறத்தாய்
மாலை - தனித்திருந்து இரங்கி வாழ்பவருடைய உயிரைச் சூழ்ந்துள்ளாய் மாலையே, உயிர்ப்
புறத்தாய் நீ ஆகில்-உயிரைச் சூழ்ந்துள்ளாய் நீயாயின், உள் ஆற்றா வேந்தன் எயிற்
புறத்து வேந்தனோடு - உள்ளிருக்கும் வலியில்லாத வேந்தனது மதிலின் புறத்துள்ள வேந்தற்கு,
என் ஆதி மாலை - மாலையே நீ என்ன உறவுடையை ஆவாய் ;
உரைத்த உரையாகிய அருளென்க. உரை
- பிரியேம் என்று கூறியது. உயிர்ப் புறத்தாய் - உயிரைக் கவர்தற்கு அதனை முற்றியுள்ளாய்.
உள்ளாற்றா வேந்தன் - நொச்சியான் ; ஆற்றா என்றமையால் அமர் புரியும் வலியில்லாத
என்றாயிற்று. எயிற் புறத்து வேந்தன் - உழிஞையான். அவனும் நீயும் புறத்தே முற்றி
உயிர்கொள்வதில் ஒரு தன்மையீர் என்றபடி. வேந்தனோடு - வேந்தற்கு.
|