தீத் துழைஇ வந்த இச் செல்லல் மருள் மாலை - தீயைப் பரப்பி வந்த வருத்தத்தைச்
செய்யும் இம் மயங்கிய மாலைப் பொழுது, தூக்காது துணிந்த இத் துயர் எஞ்சு கிளவியால்
- நம்மை வருத்துமென்று கருதாது நாம் துணியும்படி யுரைத்த இந் நன்மொழியோடே, பூக் கமழ்
கானலிற் பொய்ச் சூள் பொறுக்கென்று - பூ நாறுஞ் சோலையிடத்தே கூறிய பொய்யாகிய
சூளுரையைப் பொறுப்பாயாக வென்று, மாக் கடற்றெய்வம் - பெரிய கடற் றெய்வமே, நின்
மலர் அடி வணங்கு தும் - நினது மலர் போலும் அடியை வணங்குவேம் ;
துயரெஞ்சு கிளவி - துயரில்லாத மொழி
; நன்மொழி ; ஆவது நின்னிற் பிரியேனென்றல். கிளவியோடே கானலிற் கூறிய பொய்ச்
சூளென்க. பொய்ச் சூளால் அவரைத் தெய்வம் ஒறுக்குமென அஞ்சிப் பொறுக்கென்று வணங்குதும்
என்றாள். பொறுக்கென்று - அகரந் தொக்கது.
இது, வரைவு நீட்டித்த விடத்துத்
தலைமகன் சிறைப்புறத் தானாகக் கூறியது.
இவை முகமில் வரி என்பர்.
|