7. கானல்வரி






75

[ 9 ]

நிணங்கொள் புலால்உணங்கள் நின்றுபுள்
    ளோப்புல் தலைக்கீ டாகக்
கணங்கொள் வண்டார்த்து உலாங்கன்னி
    நறுஞாழல் கையி லேந்தி
மணங்கமழ் பூங்கானல் மன்னிமற் றாண்டோர்
அணங்குறையும் என்ப தறியேன் அறிவேனேல்
    அடையேன் மன்னோ.




72
உரை
78

         நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக் கீடுஆக - நிணம் பொருந்திய புலால் வற்றல் புலர்வதன் பாங்கர் நின்று புள்ளினை ஓட்டுதல் காரணமாக, கணம் கொள்வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறுஞாழல் கையில் ஏந்தி - கூட்டமாகிய வண்டுகள் முரன்று திரியும் கன்னியாகிய நறிய ஞாழலின் பூங்கொத்தைக் கையில் ஏந்தி, மணம் கமழ் பூங்கானல் மன்னி - மணம் நாறுகின்ற பூக்களையுடைய கானலிடத்துப் பொருந்தி, மற்று ஆண்டு ஒர் அணங்கு உறையும் என்பது அறியேன் - ஓர் தெய்வம் உறையுமென்பதை அறியேன், அறிவேனேல் அடையேன் மன்னோ - அறிவேனாயின் ஆண்டுச் செல்லேன் ;

புள் - உணங்கலைக் கவர வரும் பறவை. தலைக்கீடு - போலிக் காரணம் ; இதனை வியாசம் என்ப. கன்னி - இளமை ; உயர்திணைக்குரிய கன்னியென்னுஞ்சொல் அஃறிணை யடுத்துவருவதனை 1"ஒரு வரைக் கூறும் பன்மைக் கிளவியும், ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும், வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி, இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல" என்னுஞ் சூத்திரத்து, ஒன்றென முடித்தல் என்பதனால் அமைப்பர். ஞாழல் - புலிநகக்கொன்றை. அணங்கு - வருத்துந் தெய்வம். கானலில் உறையுமென்பதறியேன் என்றும், அறிவேனேல் ஆண்டு அடையேன் என்றும் கொண்டு கூட்டுக. மற்று, மன், ஓ - அசைகள். மன் - கழிவுமாம். இது கழற்றெதிர்மறை; இயலிடங்கூறலுமாம்.


1 தொல், சொல் 27. (உரை - சே. ந.)